2025-ஆம் ஆண்டு முதல், வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள், தங்களது பணத்தை ATM மூலம் எடுத்துக்கொள்ளலாம் என தொழிலாளர் செயலாளர் சுமிதா தவ்ரா அறிவித்துள்ளார். இதற்காக, EPFO-வின் IT அமைப்புகள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த புதிய அமைப்பின் மூலம், PF தொடர்பான உரிமைகோரல்கள் விரைவாகவும் எளிதாகவும் நிறைவேற்றப்படும்.
இதோடு நின்றுவிடாமல், கிக் எகானமி எனப்படும் தற்காலிக வேலை செய்பவர்களுக்கும் அரசு சலுகைகள் அறிவித்துள்ளது. இவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு, ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சமூக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கிக் தொழிலாளர்களுக்கான திட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகளால், நாட்டின் வேலையின்மை விகிதம் 3.2% ஆக குறைந்துள்ளது. மேலும், வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதால், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 58% ஆக உயர்ந்துள்ளது.














