கேரளாவில் தொற்றுநோய் பரவல் அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவி வருகின்றன. பொதுவாக பருவநிலை மாற்றத்தின் போது சில சொற்று நோய்கள் பரவி வருவது சகஜமான ஒன்று. ஆனால் கேரளாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏதாவது ஒரு நோய் பாதி பாதித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பல்வேறு தொற்று […]

கேரள மாநிலத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

பொதுவாக பருவநிலை மாற்றத்தின் போது சில சொற்று நோய்கள் பரவி வருவது சகஜமான ஒன்று. ஆனால் கேரளாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏதாவது ஒரு நோய் பாதி பாதித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பல்வேறு தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் சின்னம்மை, டெங்கு, மஞ்சள் காமாலை, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் ஆகியவற்றால் 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவை தவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கேரளாவில் அதிகரித்து வரும் தொற்று நோய்கள் விரைவில் பரவ கூடியது என்பதால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழக சுகாதாரத்துறை மிகவும் கவனமாக இருந்து வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu