தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள எரிக்சன் நிறுவனம், 8500 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தந்த நாட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ப, பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை மாறுபடும் என்று மெமொவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு துறையில் இதுவே அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும் பணிநீக்கமாக அறியப்படுகிறது.
குறிப்பிட்ட சில நாடுகளில், இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பு முன்னரே வெளிவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டில் சுமார் 1400 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிக்சன் நிறுவனத்தின் வட அமெரிக்க பிரிவில் இந்த பணி நீக்கத்தால் அதிக ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.














