ஈரோடு இடைத்தேர்தல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம்

February 24, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார். நாளை காலை 9 மணி அளவில் விருந்தினர் […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார். நாளை காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதி உள்ளிட்ட பகுதிளில் பிரச்சாரம் செய்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu