ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக மணீஷை மாற்றி ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, 46 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷை மாற்றி ஸ்ரீகாந்த் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.














