புதிய வாக்காளர்களுக்கான அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை

January 28, 2023

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது, வாக்காளர் பண்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் மொத்தம் 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களுக்கு அடையாள […]

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது,
வாக்காளர் பண்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் மொத்தம் 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் நிலையில், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது என்று ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu