சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் வீரர்களின் உறங்கும் முறைகள் பற்றி ஐரோப்பிய விண்வெளி மையம் விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயம் மற்றும் அஸ்தமனங்கள் ஏற்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனங்கள் நிகழ்கிறது. இதனால் அங்கு தங்கி இருக்கும் வீரர்கள் எந்த அடிப்படையில் உறக்க முறைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ஐரோப்பிய விண்வெளி மையம், “வீரர்கள் கிரீன்விச் மீன் டைம் பின்பற்றுகிறார்கள் அதன்படி, வழக்கமாக தூங்கி எழுதல் மற்றும் உறங்கச் செல்லல் போன்ற தினசரி நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.