எஸ்ஸார் குழுமம், புதிதாக எரிசக்தி பரிமாற்ற பிரிவு ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளது. எஸ்ஸார் எனர்ஜி ட்ரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரிவு, பிரிட்டனில் எரிசக்தி பரிமாற்றத்திற்கான புதிய நிலையத்தை அமைத்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக, 3.6 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில், குறைந்த கார்பன் எரிசக்தி பரிமாற்ற திட்டங்கள் பல உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், 3.6 பில்லியன் டாலர்களை பிரித்து முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2.4 பில்லியன் டாலர்கள், லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் இடையில் உள்ள ஸ்டான்ப்லோ பகுதியில் முதலீடு செய்யப்படும். மீதமுள்ள, 1.2 பில்லியன் டாலர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், ஜீரோ கார்பன் இலக்குகள் எட்டப்படும் என்று நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டோனி பவுன்டைன் தெரிவித்துள்ளார்.