எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் கடந்த 3/12 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் அதிபர் அலர் காரீசுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.