பன்னாட்டு வணிகத்தில் 15% வரி திட்டம் - ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

December 16, 2022

பன்னாட்டு வணிக நடவடிக்கைகளுக்கு, குறைந்தபட்சம் 15% வரி விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் செயல்படுத்தி உள்ளது. சில மாதங்களாக இதற்கான ஒப்புதல்கள், அனைத்து தலைவர்களிடமிருந்து பெறப்பட்டது. சுமார் 140 நாடுகள் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையர் பாலோ ஜென்ட்டிலோனி, ஐரோப்பிய யூனியன், இந்த வரி விதிப்பு மூலம் சமூக நீதியை நிலைநாட்ட உள்ளதாக கூறியுள்ளார். இந்த வரி விதிப்பு திட்டம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு […]

பன்னாட்டு வணிக நடவடிக்கைகளுக்கு, குறைந்தபட்சம் 15% வரி விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் செயல்படுத்தி உள்ளது. சில மாதங்களாக இதற்கான ஒப்புதல்கள், அனைத்து தலைவர்களிடமிருந்து பெறப்பட்டது. சுமார் 140 நாடுகள் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையர் பாலோ ஜென்ட்டிலோனி, ஐரோப்பிய யூனியன், இந்த வரி விதிப்பு மூலம் சமூக நீதியை நிலைநாட்ட உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வரி விதிப்பு திட்டம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆலோசனைப்படி கொண்டுவரப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்தை ஐரோப்பிய யூனியனில் செயல்படுத்துவது இன்னும் தாமதமாகி வருகிறது. மேலும், இதற்கான சர்வதேச ஒப்புதல்களும் தற்போது முழுமை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் முடிவில், இந்த வரி விதிப்பு திட்டம் அடுத்த வருட இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu