ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதித்தது ஐரோப்பிய யூனியன்

February 22, 2024

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த தடை அம்சங்களுக்கு ஐரோப்பிய யூனியனின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான வரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பெலாரஸ், ரஷ்யா, கிரீமியா ஆகிய பகுதிகளுக்கு சிறுவர்கள் சட்ட விரோதமாக அழைத்து செல்லப்படும் விவகாரத்தில் ஏராளமானவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனேட்ஸ் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகத்தின் தலைவர் ஓல்கா வால்கோவும் தடை விதிக்கப்பட்டவர்களில் இருக்கிறார். […]

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்த தடை அம்சங்களுக்கு ஐரோப்பிய யூனியனின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான வரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பெலாரஸ், ரஷ்யா, கிரீமியா ஆகிய பகுதிகளுக்கு சிறுவர்கள் சட்ட விரோதமாக அழைத்து செல்லப்படும் விவகாரத்தில் ஏராளமானவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனேட்ஸ் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகத்தின் தலைவர் ஓல்கா வால்கோவும் தடை விதிக்கப்பட்டவர்களில் இருக்கிறார். இவர் உக்கரைன் சிறுவர்களை வலுக்கட்டாயமாக கடத்தி பெல்லாரசிலும், ரஷ்யாவிலும் தத்து கொடுக்கிறார். மேலும், பெல்லாரஸ் பகுதியை சேர்ந்த நகராட்சி தலைவர் டிமித்ரி, செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஷாவுட் ஆகியோரும் அடங்குவர்.

முன்னதாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆக்கிரமிப்புக்குள்ளான உக்ரைன் பகுதியில் இருந்து ரஷ்யாவுக்கும் பெல்லாரசுக்கும் கடத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. பெல்லாரசுக்கு மட்டும் 2400 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடந்த ஆண்டு கடத்தப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu