ஐரோப்பிய யூனியன் மாநாட்டை நடத்த ஹங்கேரிக்கு தடை

July 24, 2024

ஐரோப்பிய யூனியன் மாநாட்டை நடத்த ஹங்கேரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சுழற்சி முறையில் அந்த அமைப்புக்கு தலைமை வகிக்கும் ஹங்கேரிக்கு அந்த மாநாட்டை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாளராக கருதப்படுகிறார். இவர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் சென்று அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். […]

ஐரோப்பிய யூனியன் மாநாட்டை நடத்த ஹங்கேரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சுழற்சி முறையில் அந்த அமைப்புக்கு தலைமை வகிக்கும் ஹங்கேரிக்கு அந்த மாநாட்டை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாளராக கருதப்படுகிறார். இவர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் சென்று அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இவருடைய இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் உக்ரைனுக்கு வழங்கி வரும் ஆதரவை இது சிறுமைப்படுத்துவதாக உள்ளதென்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐரோப்பிய அமைப்பின் மாநாடு ஹங்கேரிக்கு பதிலாக பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் நடைபெறும் என்று அந்த அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் போரெல் அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu