யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான பதினாறு சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதியது. இதில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. போட்டியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்ட்டி முறை கொண்டுவரப்பட்டது. அதில் ரொனால்டோ போர்ச்சுகல் அணியில் முதல் கோலை எடுத்து அசத்தினார். அதனை தொடர்ந்து அணிவீரர்கள் தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.