யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் ஆஸ்திரியா அணி முதல் இடத்தைப் பிடித்த அசத்தியுள்ளது.
ஜெர்மனியில் 17வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் இடையிலான இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி கீக்காட்டத்தில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதியதில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இதன் மூலம் குரூப் டி யில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தையும்,போலந்து நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதன் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியதில் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா குரூப் டி பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது














