யூரோப்பா நிலவில் நாள் ஒன்றில் 10 லட்சம் பேருக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி - விஞ்ஞானிகள் தகவல்

வியாழன் கோளை ஆய்வு செய்வதற்காக ஜூனோ விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இது வியாழன் கோளின் முக்கிய நிலவான யூரோப்பா நிலவு பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், யூரோப்பா நிலவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேருக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி நிகழ்வதாக தெரிய வந்துள்ளது. யூரோப்பா நிலவில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 1000 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது. இது 10 லட்சம் மனிதர்கள் ஒரு நாளைக்கு சுவாசிக்க போதுமானதாகும். ஜூனோ விண்கலத்தில் […]

வியாழன் கோளை ஆய்வு செய்வதற்காக ஜூனோ விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இது வியாழன் கோளின் முக்கிய நிலவான யூரோப்பா நிலவு பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், யூரோப்பா நிலவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேருக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.

யூரோப்பா நிலவில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 1000 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது. இது 10 லட்சம் மனிதர்கள் ஒரு நாளைக்கு சுவாசிக்க போதுமானதாகும். ஜூனோ விண்கலத்தில் உள்ள JADE கருவி மூலம் ஆய்வு செய்ததில், இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, கடந்த 2022 செப்டம்பரில், யூரோப்பா நிலவுக்கு மிக அருகில் கடந்து சென்ற போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை நேச்சர் அஸ்ட்ரானமி இதழில் வெளியாகி உள்ளது. இதற்கு முன், ஒரு வினாடிக்கு 2000 பவுண்டு அளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிகழலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது, வினாடிக்கு 26 பவுண்டு மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu