கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுக்க பிரான்ஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் ஆகிய பகுதிகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கவுள்ளாரென்ற தகவல்கள் வந்தன. ஆனால், மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், ராணுவ நடவடிக்கைகளின் மூலம் அந்தப் பகுதிகளை கைப்பற்றுவதாக கூறவில்லை என்றார். இதன்மூலம், அமெரிக்கா இவ்வாறு அந்த பகுதிகளை பலவந்தமாக கைப்பற்றும் நோக்கம் கொண்டிருப்பதாக டிரம்ப் மறைமுகமாக குறிப்பிட்டார். இந்நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-நோயல் பேரட் கூறியிருப்பதாவது, ஐரோப்பிய எல்லைகளின் இறையாண்மையை குறைக்கும் வகையில் எந்த நாட்டும் தாக்குதலைச் செய்ய அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.