ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போர்ச்சுகல் பிரதமர் ஆன்டினோ கோஸ்டா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆன்டினோ கோஸ்டா. போர்ச்சுகலில் லித்தியம் சுரங்கங்களுக்கு சலுகை அளித்ததில் ஊழல் நடைபெற்றதாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி விக்டர் விசாரணையின் போது கைது செய்யப்பட்டார். அதோடு விசாரணையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரதமருக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனை அடுத்து லித்தியம் சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறினார். அதோடு அந்நாட்டு அதிபரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2015 முதல் போர்ச்சுகலின் பிரதமராக சோசியலிச தலைவரான கோஸ்ட் பதவி வகித்து வந்தார்.