வியாழன் கோளை சுற்றி வரும் பனி சூழ்ந்த நிலவுகளை ஆராய, ஐரோப்பா, விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. இதற்கு ஜூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, Jupiter Icy Moons Explorer என்பதன் சுருக்கமாக JUICE என்று அழைக்கப்படுகிறது. இதனை, ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், இந்த விண்கலம் தனது விண்வெளி பயணத்திற்கு தீவிரமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பாவின் இந்த விண்வெளித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், கோரூ பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்த விண்கலத்தின் வடிவமைப்பில் பணியாற்றிய பொறியாளர்கள் இதனை 'பீஸ்ட்' என்று அழைக்கின்றனர். இது 6 டன் எடையுடன், 10 அறிவியல் கருவிகள் கொண்டுள்ளது. பூமியோடு தொடர்பு கொள்ளும் வகையில், 8 அடி உயரமான ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்கும் சோலார் பேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இறுதியாக ஒரு முறை சோதனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.