வரலாறு காணாத பண வீக்கத்தில் சிக்கி தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்

October 1, 2022

ஐரோப்பிய நாடுகளில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் செப்டம்பர் மாதத்தில் 10 சதவீதமாக பதிவாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, எரிசக்தி துறையில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாக, ஐரோப்பாவில் இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டுமே, எரிசக்தி துறையில் 40.8% விலையேற்றம் பதிவாகியுள்ளது. இதனால், 19 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பாவின் Eurozone நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. உயரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி வட்டி விகிதத்தை […]

ஐரோப்பிய நாடுகளில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் செப்டம்பர் மாதத்தில் 10 சதவீதமாக பதிவாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, எரிசக்தி துறையில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாக, ஐரோப்பாவில் இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டுமே, எரிசக்தி துறையில் 40.8% விலையேற்றம் பதிவாகியுள்ளது. இதனால், 19 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பாவின் Eurozone நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

உயரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி வட்டி விகிதத்தை ஏற்கனவே உயர்த்தி உள்ளது. தற்போதைய நிலவரத்தால், வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அத்துடன், உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 7 மாதங்கள் கழிந்த பின்னர், பொருளாதாரம் சற்று மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாத பணவீக்கம் 9.1% ஆக பதிவாகி ஐரோப்பாவிற்கு ஏமாற்றம் அளித்தது.

Eurozone பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும் விதத்தில், பணவீக்க விகிதம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறு வேறாக பதிவாகி உள்ளது. உதாரணமாக, ஜெர்மனியில் 10.8 சதவீதமும், பிரான்சில் 6.2 சதவீதமும் பணவீக்கம் பதிவாகி உள்ளது. மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், நெதர்லாந்தின் பணவீக்கம் 17.1 சதவீதமாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எனவே, பணவீக்க விகிதத்தைக் குறைக்க, பல நடவடிக்கைகளில் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி ஈடுபட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu