ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது விலை உயர்ந்ததாக மாறிவிட்டது. ஏனெனில், குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய செஞ்சன் விசா கட்டணம் 12% உயர்த்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலாவுக்காக செஞ்சன் விசா கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, 90 முதல் 180 நாட்கள் வரை ஒருவர் ஐரோப்பிய நாடுகளை சுற்றி பார்க்கலாம். செஞ்சன் விசா மூலம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 27 ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவர் பயணிக்கலாம். செஞ்சன் விசாவை பெறுவதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 90 யூரோக்களாகவும் 6 முதல் 12 வயது உடையவர்களுக்கு 45 யூரோக்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கம் உயர்ந்து வரும் காரணத்தால் விசா கட்டணத்தை உயர்த்துவதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.