செங்கடல் பகுதியில் ஹவுதி தாக்குதலை தடுக்க ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுக்கிறது.
சர்வதேச வணிக போக்குவரத்திற்கு செங்கடல் முக்கிய இடமாக கருதப்படுகிறது. தற்போது இங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஹவுதி குழுவினர் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்க முயன்றனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது. செங்கடல் பிரச்சனை காரணமாக உலக அளவில் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஐரோப்பிய யூனியன் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று ஐரோப்பிய யூனியன் கொள்கை தலைவர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏழு நாடுகள் தங்களுடைய கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க உள்ளது. பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என ஐரோப்பிய யூனியன் உறுதியளித்துள்ளது.














