மேட்டர் நிறுவனத்தின் மின்சார கியர் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

November 22, 2022

அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான மேட்டர், புதிய மின்சார கியர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவின் முதல் கியர் வைத்த மின்சார பைக் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த வாகனம் சந்தைக்கு வரும் எனவும், அதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வருடத்திற்குள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 200 கிளைகளை விரிவாக்கவும், ஏற்றுமதியில் களமிறங்கவும் மேட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]

அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான மேட்டர், புதிய மின்சார கியர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவின் முதல் கியர் வைத்த மின்சார பைக் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த வாகனம் சந்தைக்கு வரும் எனவும், அதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வருடத்திற்குள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 200 கிளைகளை விரிவாக்கவும், ஏற்றுமதியில் களமிறங்கவும் மேட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைவர் மோகல் லால்பாய், “பொதுவாக, இந்தியச் சந்தையில், மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக விற்பனையாகும். அதே நிலை, பொது மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும்போதும் தொடரும். இந்நிலையில், அனைத்து நிறுவனங்களும் மின்சார ‘ஸ்கூட்டர்’ ரக வாகனங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, எங்கள் நிறுவனத்தின் ‘மோட்டார் சைக்கிள்’ ரக வாகனங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu