EV உற்பத்தியாளர்களுக்கு MoRTH எச்சரிக்கை

ஏப்ரல் 29, தீ விபத்துகள் குறித்து விசாரிக்கப்படும் வரை புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை MoRTH கேட்டுக் கொண்டதாக ஊடகத்தின் ஒரு பகுதி செய்தி வெளியிட்டுள்ளதாக வியாழக்கிழமை அன்று ட்வீட்டில் கூறப்பட்டது.

ஏப்ரல் 29, தீ விபத்துகள் குறித்து விசாரிக்கப்படும் வரை புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை MoRTH கேட்டுக் கொண்டதாக ஊடகத்தின் ஒரு பகுதி செய்தி வெளியிட்டுள்ளதாக வியாழக்கிழமை அன்று ட்வீட்டில் கூறப்பட்டது. இதனை முற்றிலும் மறுத்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) எந்தவொரு மின்சார வாகன உற்பத்தியாளர்களையும் உற்பத்தியை நிறுத்துமாறு அறிவுறுத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது நாட்டின் கடுமையான வெப்பத்தின் காரணமாக சில EV பேட்டரிகள் ஏதேனும் பழுதடைந்தால் அந்த இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெற வேண்டும்,என்று MoRTH-ன் அமைச்சர் நிதின் கட்கரி EV உற்பத்தியாளர்களை கேட்டுக்கொண்டார். மேலும் EV தொழில் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அரசாங்கமானது மின்சார வாகனங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முயற்சித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். இ௫ப்பினும் பாதுகாப்புக்கு முதல் முன்னுரிமை” என்று அவர் கூறினார். அத்துடன் எந்தவொரு நிறுவனமும் தங்கள் உற்பத்திகளில் அலட்சியம் காட்டினால், “கடுமையான அபராதம் விதிக்கப்படும் மற்றும் அனைத்து குறைபாடுள்ள வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்” என்று கட்காரி EV தயாரிப்பாளர்களை எச்சரித்துள்ளார். இன்று வரை, மூன்று Pure EV, ஒரு Ola, இரண்டு Okinawa மற்றும் 20 Jitendra EV ஸ்கூட்டர்கள் தீ விபத்துக்குள்ளானதால் இச்சம்பவம் பற்றி விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.அதுமட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கான தரத்தை மையமாகக் கொண்ட வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் அமைச்சர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu