பருவநிலை மாற்றம் - எவரெஸ்ட் சிகரத்தில் பனி உறைவு குறைவு

February 21, 2025

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்திலும் தெளிவாக காணப்படுகிறது. கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவாக இருந்ததால், பனி உறைவு எல்லை 150 மீட்டர் குறைந்துள்ளதாக நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேபாளம்-திபெத் எல்லையில் அமைந்த எவரெஸ்ட் சிகரத்தின் பனிக்கட்டிகள் 6,000 மீட்டர் உயரத்திற்கு மேல் குறைந்து விட்டதாகவும், தினமும் 2.5 மில்லிமீட்டர் அளவுக்கு நேரடியாக ஆவியாகிவிடுவதாகவும் நிபுணர் மவுரி பெல்டோ தெரிவித்துள்ளார். 2023 அக்டோபர் முதல் 2024 ஜனவரி வரை எவரெஸ்ட் பகுதியில் வறண்ட வானிலை […]

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்திலும் தெளிவாக காணப்படுகிறது. கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவாக இருந்ததால், பனி உறைவு எல்லை 150 மீட்டர் குறைந்துள்ளதாக நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேபாளம்-திபெத் எல்லையில் அமைந்த எவரெஸ்ட் சிகரத்தின் பனிக்கட்டிகள் 6,000 மீட்டர் உயரத்திற்கு மேல் குறைந்து விட்டதாகவும், தினமும் 2.5 மில்லிமீட்டர் அளவுக்கு நேரடியாக ஆவியாகிவிடுவதாகவும் நிபுணர் மவுரி பெல்டோ தெரிவித்துள்ளார்.

2023 அக்டோபர் முதல் 2024 ஜனவரி வரை எவரெஸ்ட் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 2021 முதல் குளிர்காலங்களில் பனி உறைவு எல்லை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆர்க்டிக், அண்டார்டிகா போன்ற துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது போல், உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரத்திலும் இதே நிலை தொடர்வதாக சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu