ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மார்ச் 10-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10-ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.