38 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபையில் நுழைகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற இளங்கோவன், இளைஞர் காங்கிரசில் தீவிர செயற்பாட்டாளராக இருந்தார். 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். மன்மோகன்சிங் அமைச்சரவையில், மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது பாஜக அரசு கொண்டு வந்த ஜவுளி தொழில்துறை மீதான சென்வாட் வரியை நீக்கி, ஜவுளி தொழில் திறம்பட செயல்பட வழிவகுத்தார். பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா மறைந்ததால், இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ளார். இதன்மூலம் 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.