தமிழக அமைச்சரவையில் சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவி ஏற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அங்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.