இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

January 31, 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்பா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிராக, ரகசிய காப்புறுதி விதிமீறல், தோஷகானா, பரிசுப் பொருட்கள் விற்பனை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. முதலாவதாக, கடந்த ஆகஸ்டில், ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்ததாக, நேற்று, ரகசிய காப்புறுதி மீறல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்பா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு எதிராக, ரகசிய காப்புறுதி விதிமீறல், தோஷகானா, பரிசுப் பொருட்கள் விற்பனை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. முதலாவதாக, கடந்த ஆகஸ்டில், ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்ததாக, நேற்று, ரகசிய காப்புறுதி மீறல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்று, தோஷ காணா வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை மட்டும் இன்றி, பொது பதவியில் இருப்பதற்கு இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 787 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொது தேர்தலில், இம்ரான் கான் கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu