இலங்கையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடத்தியது. இதில் மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாநாட்டில் ராஜபக்சே பேசியதாவது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற குற்றச்சாட்டு எங்கள் மீது விழுந்துள்ளது. விடுதலை புலிகள் உடன் போரில் ஈடுபட்டபோது வளர்ச்சி பாதையில் செல்வதை உறுதிப்படுத்தினோம். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.