சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என கேரளா தேவசம் போர்டு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களை எந்தெந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அனுமதிக்கலாம் என்பது குறித்து புத்தகம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 2018ம் ஆண்டு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம் என்ற வார்த்தையை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கேரளா தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டதாகவும் வழிகாட்டு நெறிமுறை புத்தகங்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைளும், 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.














