தமிழக அரசு அறிமுகப்படுத்திய பள்ளி காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இரு முதல்வர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தினர்.
விழாவில் பேசிய பகவந்த் மான், “தமிழகத்தின் இந்த முன்னேற்றமான திட்டம் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் கல்வி முன்னேற்றத்துக்கும் பெரும் பலனளிக்கும். பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து நாளைய அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிப்பேன்” என்று தெரிவித்தார்.