உணவு தானிய மானியத்துக்கான செலவு ரூ.2.7 லட்சம் கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் நோக்கில் மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மக்களின் தேவை கருதி இந்தத் திட்டம் இவ்வாண்டு டிசம்பர் வரையில் நீட்டிக்கப்பட்டது. பட்ஜெட்டில் உணவுதானிய மானியத்துக்கு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் வரையில் திட்டம் நீட்டிக்கப்பட்டதால் உணவுதானிய மானியத்துக்காக மத்திய அரசு செலவிடும் தொகை ரூ.2.7 லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திட்டம் 2023 மார்ச் வரையில் நீட்டிக்கப்பட்டால், உணவுதானிய மானியத்துக்கான மத்திய அரசின் செலவு ரூ.3.1 லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது.