சங்காரெட்டியில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் அமைந்துள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் ரசாயன ஆலையில் ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில், 10 பேர் இடத்தில் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 35 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதுடன், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.