பாகிஸ்தான் - பெஷாவர் மசூதியில் குண்டுவெடிப்பு - 46 பேர் பலி 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

January 30, 2023

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதியில் இன்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில், தற்போதைய நிலவரப்படி, 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பை சேர்ந்த சருபக்கப் முஹம்மத் பொறுப்பேற்றுள்ளார். பெஷாவரில் உள்ள மசூதியில், மதிய நேர தொழுகைக்காக பலர் குழுமி இருந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்ததாக சொல்லப்படுகிறது. குண்டு வெடிப்பில் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்துள்ளதாகவும், […]

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதியில் இன்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில், தற்போதைய நிலவரப்படி, 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பை சேர்ந்த சருபக்கப் முஹம்மத் பொறுப்பேற்றுள்ளார்.

பெஷாவரில் உள்ள மசூதியில், மதிய நேர தொழுகைக்காக பலர் குழுமி இருந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்ததாக சொல்லப்படுகிறது. குண்டு வெடிப்பில் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்துள்ளதாகவும், அதற்கு இடையில் பலர் சிக்கியிருக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ட்விட்டரில் தனது கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu