இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே அந்தந்த நாடுகளின் கரன்சிகள் மூலமாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி மதிப்பிலான பருப்பு வகைகள் மியான்மர் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பருப்பு ஏற்றுமதியை பொருத்தவரை, முதல் முறையாக இந்திய ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மற்றும் மியான்மரின் கியாத் நாணயங்கள் மூலம் நேரடி பருப்பு ஏற்றுமதி வர்த்தகம் கடந்த செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்துள்ளது. மேலும், டாலருக்கு மாற்றாக உள்நாட்டுப் பணம் பயன்படுத்தப்படுவதால் இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














