வெட்டி, பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி 10% குறையும் - ஐசிஆர்ஏ அறிக்கை

September 29, 2022

உலக அளவில், வெட்டி, பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மதிப்பு 10% குறையும் என்று பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ (ICRA) தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதி விற்பனை மதிப்பு 22 முதல் 22.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்று கூறியுள்ளது. அத்துடன், இந்தியாவில், வருடாந்திர வைர ஏற்றுமதி அளவு 5% குறைந்துள்ளதை இந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கனவே, நடப்பு ஆண்டில் […]

உலக அளவில், வெட்டி, பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மதிப்பு 10% குறையும் என்று பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ (ICRA) தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதி விற்பனை மதிப்பு 22 முதல் 22.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்று கூறியுள்ளது. அத்துடன், இந்தியாவில், வருடாந்திர வைர ஏற்றுமதி அளவு 5% குறைந்துள்ளதை இந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கனவே, நடப்பு ஆண்டில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதியில் 20% சரிவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்தியா, பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதியில் உச்சத்தை எட்டியது. சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வைர ஏற்றுமதி அவ்வாண்டில் நடைபெற்றது. அமெரிக்கா, இந்திய வைரத்தின் முக்கிய இறக்குமதியாளராக இருந்தது. தற்போது, அமெரிக்காவில், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வைரங்கள், சில்லரை வணிகத்திற்கு தயாராக உள்ளன. மேலும், கடந்த வருடத்தின் சூழலில், வைரத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் வேறு பல முதலீடுகள் இருப்பதால் வைர முதலீடு குறைந்துள்ளது. அத்துடன், வைரத்திற்கான உலகளாவிய தேவையில், 10 சதவீதத்தை உள்ளடக்கிய சீனாவில், கொரோனா பரவல் காரணமாக பொதுமடக்கம் ஏற்பட்டது. இந்த காரணங்களால், நடப்பு ஆண்டில், இந்திய வைரத்திற்கான தேவை குறைந்துள்ளது.

ஐசிஆர்ஏ நிறுவனத்தின் துணைத் தலைவர் சாக்ஷி சுனேஜா, "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில்லறை வணிகத்திற்கான வைர இருப்பு அதிகரித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் பட்டை தீட்டப்பட்ட வைர ஏற்றுமதியில் 13 முதல் 15 சதவீத சரிவு காணப்படும். மேலும், வைரத்தின் தேவை குறைந்துள்ளதால், பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் விலையிலும் 8 முதல் 10 சதவீதம் சரிவு நேரலாம்" என்று கூறியுள்ளார்.

ஏற்றுமதி குறைந்துள்ள அதே வேளையில், பட்டை தீட்டப்படாத வைரங்களின் விலை 23% அதிகரித்துள்ளது. ரஷ்ய நாட்டு வைரச் சுரங்கங்களில் இருந்து 30 சதவீத உலகின் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. தற்போதைய சூழலில், அவை நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த விலை உயர்வு நேர்ந்துள்ளது. இந்நிலையில், வைரத்தின் மூலமாக கிடைக்கும் வட்டி மதிப்பு, நடப்பு நிதி ஆண்டில் 3.5 - 4 மடங்காக இருக்கும் என்று ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது 5.7 மடங்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu