உ.பி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்து

November 16, 2023

உத்தரபிரதேசத்தில் புது டெல்லி தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பீகார் செல்லும் ரயில் உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகே செல்லும் போது ரயிலின் இரண்டு பெட்டிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் […]

உத்தரபிரதேசத்தில் புது டெல்லி தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பீகார் செல்லும் ரயில் உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகே செல்லும் போது ரயிலின் இரண்டு பெட்டிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து உடனடியாக கண்டறியப்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உயிர் சேதம் ஏதும் இதுவரை ஏற்பட்டதாக தகவலும் வெளிவரவில்லை. ரயிலில் பயணித்த நான்கு பயணிகள் மட்டும் தீக்காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu