ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரோவண்ணாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரோவண்ணாவின் மீது பெண்கள் பாலியல் புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர் மீது மூன்று பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற இவரை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கடந்த 31 ஆம் தேதி கைது செய்தனர். அதனை அடுத்து இரண்டு முறை பிரஜ்வல் ரோவண்ணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கில் மேலும் 14 நாட்களுக்கு பிரஜ்வல் ரோவண்ணாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரோவண்ணா பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்














