ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதாவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானத்தை கூட்டுக் குழு தலைவர் பிபி சவுத்ரி மக்களவையில் சமர்ப்பித்தார். அதில் ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதா (129 வது சட்டத்திருத்தம் 2024) மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பான விவரங்கள் உள்ளன. இந்த தீர்மானம் அங்கீகரிக்கப் பட்ட நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் கூட்டுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.














