தொடர் விடுமுறையை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் சேவையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 23 மற்றும் 24ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் இது வார இறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊருக்காக பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நிர்வாகம் தனது ரயில் சேவையை நீட்டிப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இரவு 10 மணி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் இரவு 8 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களில் ஒன்பது நிமிடங்களுக்கு பதிலாக ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. இவை குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.