தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களின் இயக்க நேரங்களில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07436) அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலும் (வண்டி எண்-07435) ஜனவரி 3-ந்தேதியில் இருந்து மார்ச் 28-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. மேலும், காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07191) ஜனவரி 6-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்படுவதாகவும், மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07192) ஜனவரி 8-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














