சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது, விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கு கால நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சனி (19.11.2022) மற்றும் ஞாயிற்று கிழமையில் (20.11.2022) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.