நாகர்கோவிலுக்கு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வாராந்திர ரெயில் சேவையின் நீடிக்கபட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) செப்டம்பர் 1 முதல் நவம்பர் 24 வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) செப்டம்பர் 2 முதல் நவம்பர் 25 வரை தொடரும். இந்த ரெயில் சேவைகள் பயணிகளுக்கு கூடுதல் வசதியையும், பயணம் செய்யும் நேரத்தை எளிதாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.