மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்துவரும் வினய் மோகன் குவாத்ராவின் பதவி காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வினய் மோகன் குவாத்ரா மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது மத்திய அமைச்சரவையில் நியமனக்குழு ஒப்புதலின் பேரில் பிறப்பிக்க பட்டுள்ளது. இதன்படி குவாத்ரா 2024 அக்டோபர் 31ஆம் தேதி வரை பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1988 இல் வெளியுறவுத்துறை பணியில் வினய் மோகன் குவாத்ரா இணைந்தார். வெளியுறவு துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.














