சிறப்பு ரெயில்களின் இயக்கம் நீட்டிப்பு – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

August 22, 2025

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே, பல சிறப்பு ரெயில்களின் சேவைகளை நீட்டித்து உள்ளது. நெல்லை – மேட்டுப்பாளையம் இடையிலான சிறப்பு ரெயில் (06030) செப்டம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படும். அதேபோல், மேட்டுப்பாளையம் – நெல்லை செல்லும் ரெயில் (06029) செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இயங்கும். மேலும், திருச்சி – தாம்பரம் இடையிலான சிறப்பு ரெயில் (06190) செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30 […]

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே, பல சிறப்பு ரெயில்களின் சேவைகளை நீட்டித்து உள்ளது.

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையிலான சிறப்பு ரெயில் (06030) செப்டம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படும். அதேபோல், மேட்டுப்பாளையம் – நெல்லை செல்லும் ரெயில் (06029) செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இயங்கும். மேலும், திருச்சி – தாம்பரம் இடையிலான சிறப்பு ரெயில் (06190) செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30 வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கமாக தாம்பரம் – திருச்சி ரெயில் (06191) அதே காலத்திலும், அதே நாட்களிலும் இயக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu