வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகள் வசதி மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில், மறுமார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து செகந்திராபாத் வரும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சிகுடாவில் இருந்து […]

பயணிகள் வசதி மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில், மறுமார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து செகந்திராபாத் வரும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சிகுடாவில் இருந்து மதுரை வரும் வாராந்திர சிறப்பு ரயில், மறுமார்க்கமாக மதுரையிலிருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மகாராஷ்டிரா - ஈரோடு - மகாராஷ்டிரா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்களும், தெலுங்கானா கச்சிகுடா - நாகர்கோவில் - கச்சிக்குடா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்களும் நீடிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu