உலகின் புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தயம் 75வது ஆண்டை எட்டியுள்ளது. இந்தத் தொடக்க விழா லண்டனில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் 10 அணிகளின் 20 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு இசைக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
7 முறை உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தாண்டின் முதல் பார்முலா 1 பந்தயம் மார்ச் 14ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.