விமானப் பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயம் இல்லை - மத்திய அரசு

November 17, 2022

விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், கொரோனா பரவல் வெகுவாக குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளதால், விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு […]

விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், கொரோனா பரவல் வெகுவாக குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளதால், விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. ஆனால், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படும். இதை அணியாதவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu