கடந்த 2022 ஆம் ஆண்டு, வாட்ஸ்அப் செயலியில் கம்யூனிட்டி என்ற புதிய அம்சம் அறிமுகமானது. இந்த அம்சம் தற்போது பேஸ்புக் மெசஞ்சர் தளத்தில் அறிமுகம் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஃபேஸ்புக் மெசஞ்சர் தளத்தில் 5000 பேர் வரை கம்யூனிட்டியில் இணையலாம். கம்யூனிட்டியில் இணைவது மட்டுமின்றி, தரவுகள் பரிமாற்றத்திலும் ஈடுபடலாம். மேலும், ஒத்த ரசனை கொண்டவர்களுடன் நட்பு கொள்ளலாம். கிட்டத்தட்ட வாட்ஸ்அப் கம்யூனிட்டி செயல்படுவது போலவே ஃபேஸ்புக் மெசஞ்சர் கம்யூனிட்டி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் ஒருவரது கைபேசி எண் இருந்தால் மட்டுமே கம்யூனிட்டியில் இணைய முடியும். ஆனால், மெசஞ்சர் கம்யூனிட்டியில் தங்கள் நண்பர்களை கம்யூனிட்டியில் உள்ளவர்கள் எளிமையாக இணைத்துக் கொள்ளலாம். விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.