மெட்டா நிறுவனம், ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக, அதே போன்ற சமூக ஊடகத் தளத்தை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “சமூக ஊடகத்தில் எழுத்துப்பூர்வ பதிவுகளுக்கான புதிய தளம் ஒன்றை வெளியிட உள்ளோம். இது தனித்த முறையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், p92 என்ற புனைப்பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்த செயலி, மஸ்தாதுன் தளத்தை இயக்கும் கட்டமைப்புடன் இணைந்து செயல்படுமாறு இருக்கும்” என்று கூறியுள்ளார். மஸ்தாதுன் என்பது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளம் ஆகும். எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதற்கு பிறகு, இந்த தளத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.